கோபிச்செட்டிப்பாளையம் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேர் கைது

கோபிச்செட்டிப்பாளையம் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேர் கைது
X

பைல் படம்.

கோபிச்செட்டிப்பாளையம் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.52 ஆயிரம் பறிமுதல் செய்தனர்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள இண்டியம்பாளையம் பகுதியில் சிலர் சீட்டாடுவதாக கடத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கடத்தூர் போலீசார் இண்டியம்பாளையம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் சிலர் சூதாட்டத்தில் ஈடுபடடுக் கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். இதில் சின்னசாமி, மோகன்ராஜ், அருணாச்சலம், ஆனந்தன், பழனிசாமி, நாகப்பன், பழனிசாமி, சக்திவேல், சின்னப்பன், பாட்டப்பன் ஆகிய 10 பேர் என தெரிய வந்தது. இதில் 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்களிடம் இருந்து 52 சீட்டு கட்டுகள் மற்றும் ரூ. 52 ஆயிரத்து 380 பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!