ஈரோடு மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பெறப்பட்ட 75 மனுக்கள்!

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (28ம் தேதி) நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் 75 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் இன்று (28ம் தேதி) நடைபெற்றது. இந்த கூட்டத்தில், 2025 வேளாண் நிதிநிலை அறிக்கையில் விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
தொடர்ந்து, நீர் வள ஆதாரத்துறையின் சார்பாக நிதிநிலை அறிக்கையில் ஈரோடு மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி விபரங்களை கோட்டம் வாரியாக எடுத்துரைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, வேளாண் விற்பனைக் குழுவின் செயல்பாடுகள், சேமிப்பு கிடங்கு, குளிர்பதன கிடங்கு மற்றும் உலர் கலன் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, விவசாயிகளிடமிருந்து 75 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்று தொடர்புடைய அலுவலர்களிடம் வழங்கி உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். முன்னதாக, வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத் துறையின் சார்பாக உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தால் அமைக்கப்பட்ட கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், வேளாண்மை இணை இயக்குநர் தமிழ்செல்வி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கந்தராஜா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) லோகநாதன், செயற்பொறியாளர் (வேளாண் பொறியியல்) மனோகரன், செயலாளர் மற்றும் துணை இயக்குநர் (ஈரோடு விற்பனைக்குழு) சாவித்திரி, தோட்டக்கலை உதவி இயக்குநர் நக்கீரன் உட்பட விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu