சத்தியமங்கலம்: சேவல் வைத்து சூதாடிய 7 பேர் கைது

சத்தியமங்கலம்: சேவல் வைத்து சூதாடிய 7 பேர் கைது
X

கைது செய்யப்பட்ட 7 பேர். 

கொண்டப்பநாயக்கன்பாளையம் பகுதியில் சேவல் சண்டை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போதும் சத்தியமங்கலம் அடுத்த கொண்டப்பன்நாயக்கன்பாளையம் பகுதியில் சிலர் சேவல் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். போலீசை பார்த்ததும் அவர்கள் தப்பி ஒட முயன்றனர். உடனடியாக போலீசார் அந்த கும்பலை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் சதீஷ், தமிழ்செல்வன், சிவகுமார், மைதீன், சரத்குமார், அஷரப் அலி, குழந்தைவேலு ஆகியோர் என்பதும், பணம் வைத்து சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டு இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து 7 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த ரூ.7,800 ரொக்க பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!