அந்தியூர் அடுத்த பர்கூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 6வது கிளை மாநாடு

அந்தியூர் அடுத்த பர்கூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 6வது கிளை மாநாடு
X

பர்கூர் வட்டார சிபிஐ சார்பில் மாநாட்டில் பங்கேற்ற பொதுமக்கள்  

இ.கம்யூனிஸ்ட் கட்சி கிளை மாநாட்டில் அதிரடிப்படையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண தொகை வழங்க வேண்டும் என தீர்மானம்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலை வட்டார இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 6வது கிளை மாநாடு தாமரைக்கரையில் இன்று நடைபெற்றது. மாநாட்டிற்கு ஈரண்ணன் , சித்ரா, சிவராமன் ஆகியோர் தலைமை வகித்தனர். மாநாட்டில் கட்சியின் கொடியை மாதி ஏற்றி வைத்தார். சிபிஐ கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் கந்தசாமி மாநாட்டை துவக்கி வைத்தார். இதனையடுத்து, 25 பேர் கொண்ட புதிய வட்டார குழு தேர்வு செய்யப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில் ஈரோடு வனப்பகுதியை புலிகள் காப்பகமாக அறிவிக்கும் முன், வன உரிமைச்சட்டத்தை, வனத்தை நம்பி வாழ்கின்ற மக்கள் வாழும் பகுதியில் முறையாக அமல்படுத்திட வேண்டும்,ப ர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக உயர்த்திட வேண்டும், வேலைவாய்ப்பற்ற மலைப்பகுதி பெண்களுக்கு100 நாள் வேலை திட்டத்தை மார்ச் மாதத்திற்குள் தாமதிக்காமல் வேலை வழங்கிட வேண்டும்,

தாமரைக்கரை அரசு உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தி, பிற்பட்டோர் மாணவர் விடுதி ஏற்படுத்த வேண்டும், அதிரடிப்படையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இருப்பில் உள்ள நிவாரணத் தொகையை முதல்கட்டமாக வழங்கிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் பர்கூர் ஊராட்சியில் உள்ள பல்வேறு இடங்களில் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!