ஈரோடு மாவட்டத்தில் இந்தாண்டில் இதுவரை தொலைந்து போன 627 செல்போன்கள் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு
தொலைந்து போன செல்போன்களை உரியவர்களிடம் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் ஒப்படைத்த போது எடுத்த படம்.
ஈரோடு மாவட்டத்தில் இந்தாண்டில் இதுவரை தொலைந்து போன 627 செல்போன்கள் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாக ஈரோடு மாவட்ட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
2024ம் ஆண்டில் ஈரோடு மாவட்டத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தங்களது செல்போன் தொலைந்து விட்டதாக சிஇஐஆர் போர்ட்டலில் பதிவு செய்தும் மற்றும் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேரிலும் புகார் கொடுத்தனர்.
அதன் அடிப்படையில், செல்போன் தொலைந்த தேதி, இடம் மற்றும் இதர விபரங்கள் பெறப்பட்டு, ஈரோடு மாவட்ட அனைத்து காவல் நிலையங்களிலும் மற்றும் சைபர் செல் பிரிவின் மூலம் போலீசார் துரித நடவடிக்கை மேற்கொண்டனர்.
இந்த நடவடிக்கை மூலம் ரூ.9 லட்சத்து 89 ஆயிரத்து 666 மதிப்புள்ள 63 செல்போன்களை கைப்பற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து அதை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (டிச.27) நடந்தது.
இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.ஜவகர் கலந்து கொண்டு சைபர் கிரைம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி செல்போன்களை உரியவர்களிடம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், ஈரோடு சைபர் கிரைம் பிரிவு கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வேலுமணி மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், இந்தாண்டில் இதுவரை 627 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாக ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu