அந்தியூர் பகுதியில் சேவல் வைத்து சூதாடிய 6 பேர் கைது

அந்தியூர் பகுதியில் சேவல் வைத்து சூதாடிய 6 பேர் கைது
X
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் சேவல் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது, 4 ஆயிரத்து 300 ரூபாய் பறிமுதல்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் சேவல் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது 4 ஆயிரத்து 300 ரூபாய் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.அந்தியூர் அருகே மந்தை நேரு நகர் பகுதியில் சேவல் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அந்தியூர் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக்கு ரகசிய தகவல் கிடைத்ததுதகவலின் அடிப்படையில் அப்பகுதிக்கு விரைந்து சென்ற சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது சேவல் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்த சுரேஷ்குமார் ராஜா கோவிந்தன் தாமரைக்கண்ணன் பிரவீன் குமார் பிரபு ஆகிய 6 பேர் 2 சேவல்களை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்ததுஇதனை தொடர்ந்து அவர்களை சுற்றிவளைத்து கைது செய்து அவர்களிடமிருந்து இரண்டு சேவல்கள் பணம் 4 ஆயிரத்து 300 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!