பங்களாப்புதூர் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது

பங்களாப்புதூர் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது
X
பைல் படம்
பங்களாப்புதூர் அருகே உள்ள டி.ஜி.புதூர் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்த போலீசார் ரூ.5,080 பறிமுதல் செய்தனர்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த டி.என்.பாளையம் அருகே உள்ள டி.ஜி.புதூர் பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக வந்த தகவலை அடுத்து பங்களாப்புதூர் போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது டி.ஜி.புதூர் ஜம்பள்ளம் அருகே சிலர் பணம் வைத்து சீட்டு விளையாடிக் கொண்டிருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட ஊட்டி தூத்தூர்தோட்டம் பகுதியை சேர்ந்த பழனிச்சாமி 47, ஏளூர் பகுதியை சேர்ந்த கோபால் 38, காளியூரை சேர்ந்த செல்வராஜ் 38, பெரிய கொடிவேரியை சேர்ந்த குருஷ்விக்னேஷ்வர் என்கிற ரோஜர் 28,‌ பரமேஸ்வரன் 43, ரமேஷ் 42 ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து 5 ஆயிரத்து 80 ரூபாயை கைப்பற்றினர். இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
crop opportunities ai agriculture