ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் முக கவசம் அணியாத 525 பேருக்கு அபராதம்

ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் முக கவசம் அணியாத 525 பேருக்கு அபராதம்
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் முக கவசம் அணியாத 525 பேருக்கு போலீசார் அதிரடியாக அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கொரோனா உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் ஊடுருவி தமிழகத்திலும் இதன் தாக்கம் எதிரொலித்து வருகிறது. தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா தாக்கம் இருந்து வருகிறது.

இந்நிலையில் கொரோனா அவ்வப்போது உருமாற்றம் அடைந்து மக்களை மேலும் பீதியில் ஆழ்த்தி வருகிறது. இதை அடுத்து மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது முகக் கவசம், சமூக வலை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. சுகாதாரத் துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்திலும் கொரோனா பரவால்லை கட்டுப்படுத்த சுகாதார துறையினர் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது கண்டிப்பாக கவசம் அணிந்து வர வேண்டும்.

பொது இடங்களில் சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும். இதனை மீறுபவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வந்தது. முகக் கவசம் அணியாமல் வந்தால் ரூ.200, பொது இடங்களில் சமூக இடைவெளி பின்பற்றவில்லை என்றால் ரூ. 500 அபராதம் விதிக்கப்பட்டு வந்தது.

மாவட்டம் முழுவதும் முககவசம் அணியாமல் வருபவர்களுக்கு போலீசார், வருவாய்த்துறையினர் தலா ரூ.200 அபராதம் விதித்து வருகின்றனர். அதன்படி ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரு நாளில் முக கவசம் அணியாமல் வந்த 525 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூல் செய்யப் பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil