பெருந்துறையில் 5 வடமாநில இளம்பெண்கள் மாயம்: போலீசார் விசாரணை

பெருந்துறையில் 5 வடமாநில இளம்பெண்கள் மாயம்: போலீசார் விசாரணை
X

பைல் படம்

தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 5 வடமாநில இளம்பெண்கள் மாயமானது குறித்து பெருந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த புதுப்பாளையம் பகுதியில் ஒரு தனியார் ஜவுளி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் வட மாநிலத்தை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் நிறுவனத்தின் அருகே உள்ள மகளிர் விடுதியில் தங்கி பணியாற்றி வருகின்றனர். இந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஒரிசா மாநிலத்தை சேர்ந்த ரித்தராணி தண்டாபார்ட் (வயது24), சுனிலி ஹன்ஸ்டா (வயது 21) , ஹல்மிதா ஹன்ஸ்டா (வயது 19), ரண்டி ஹோ (வயது 20), சால்மி முன்டா (வயது 21 ) ஆகிய 5 வடமாநில பெண்களும் கடைக்கு பொருட்கள் வாங்க சென்றனர். பின்னர், இரவு 8 மணிக்கு ஆகியும் விடுதிக்கு வராததால் விடுதி காப்பாளர் ரெபதிபத்ரா பெருந்துறை போலீஸில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!