அந்தியூரில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை

அந்தியூரில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை
X

தேவராஜ்.

அந்தியூரில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் தவுட்டுப்பாளையத்தை சேர்ந்த 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகார் தொடர்பாக கடந்த ஆண்டு தேவராஜ் (வயது 58) என்ற கூலி தொழிலாளியை பவானி அனைத்து மகளிர் போலீசார் போச்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இவ்வழக்கு ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பான தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட தேவராஜூக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து நீதிபதி மாலதி தீர்ப்பு வழங்கினார்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.50 ஆயிரம் தமிழக அரசின் சார்பில் நிவாரணமாக ஒரு மாதகாலத்திற்குள் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

Tags

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!