கவுந்தப்பாடி அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது

கவுந்தப்பாடி அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது
X

பைல் படம்.

கவுந்தப்பாடி அருகே உள்ள ஓடத்துறை பகுதியில் சீட்டு சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் கவுந்தபாடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சப்-இன்ஸ்பெக்டர் குமரேசன் தலைமையிலான போலீசார் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஓடத்துறை மயானத்தில் பகுதியில் சீட்டு சூதாட்டத்தில் ஈடுபட்ட, அதே பகுதியை சேர்ந்த யுவராஜ் (வயது 30), ஸ்ரீரங்கன் (வயது 42), வடிவேலன் (வயது 31), வீரக்குமார் (வயது 31), மலேஸ்வரன் (வயது 22) ஆகியோரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.230 ரூபாயை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!