ஈரோடு மாவட்டத்தில் 48 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

ஈரோடு மாவட்டத்தில் 48 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
X
ஈரோடு மாவட்டத்தில் 2 நாட்களாக நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் 48 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் இரண்டு நாள் சிறப்பு தடுப்பூசி முகாம் 437 இடங்களில் நேற்று வரை நடந்தது. இந்த முகாம்களில் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டி ருந்தது.

இதில், முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்வோர் ஆர்வமாக வந்து தடுப்பூசி செலுத்தி சென்றனர். இந்த இரண்டு நாள்முகாம்களில் நேற்று இரவு7 மணி நிலவரப்படி 48 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்