ஈரோடு மாவட்டத்தில் 458 மெட்ரிக் டன் நெல் இருப்பு: வேளாண் அதிகாரிகள் தகவல்
பைல் படம்
கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதையடுத்து ஈரோடு மாவட்டத்தில் 458 மெட் ரிக் டன் நெல் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சின்னசாமி கூறுகையில், கீழ்பவானியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதையடுத்து ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பவானிசாகர், நம்பியூர், சத்தி, கோபி, பெருந்துறை, சென்னிமலை, மொடக்குறிச்சி, டி.என்.பாளையம், கொடுமுடி. பவானி உள்ளிட்ட வட்டாரங்களில் 60 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சம்பா பட்டத்திற்கு தேவையான ஏடிடி 38 ரகம் 104 மெட்ரிக் டன்னும். ஏடிடி 39 ரகம் 16 மெட்ரிக் டன், ஐ.ஆர் 20 ரகம் 123 டன், பிபிடி 5204 ரகம் 66 டன், சம்பா சப் 1 ரகம் 70 மெட்ரிக் டன், பாரம்பரிய ரகமான தூய மல்லி 3 மெட்ரிக் டன் என மொத்தம் 13 வகை யான நெல் ரகங்கள் 458 மெட்ரிக் டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
இது தவிர அரசு சார்பு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களில் 220 டன் நெல் விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது விவசாயிகள் விதை நேர்த்தி செய்து விதைப்பதன் மூலம், விதை மூலம் பரவும் நோய்களை கட்டுப்படுத்த முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu