அந்தியூர், புதுப்பாளையத்தில் ரூ.4.53 லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம்

அந்தியூர், புதுப்பாளையத்தில் ரூ.4.53 லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம்
X

பைல் படம்

அந்தியூர் புதுப்பாளையம் வாழைத்தார் ஏல நிலையத்தில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.4.53 லட்சத்திற்கு வாழைத்தார் விற்பனை.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் புதுப்பாளையம் வாழைத்தார் ஏல நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட, கதலி ரக வாழை ஒரு கிலோ 22 ரூபாய்க்கும், நேந்திரம் ஒரு கிலோ 28 ரூபாய்க்கும், செவ்வாழை தார் ஒன்று 650 ரூபாய்க்கும், தேன்வாழை தார் ஒன்று 440 ரூபாய்க்கும், பூவன் தார் ஒன்று 450 ரூபாய்க்கும், ரொப்பர் தார் ஒன்று 270 ரூபாய்க்கும், மொந்தன் தார் ஒன்று 270 ரூபாய்க்கும் ரஸ்தாளி தார் ஒன்று 320 ரூபாய்க்கு விற்பனையானது.

மொத்தம் 2 ஆயிரத்து 800 வாழைத் தார்கள் கொண்டு வரப்பட்ட நிலையில், நான்கு லட்சத்து 53 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!