ஈரோடு மாவட்ட 7வது கட்ட தடுப்பூசி முகாம்: 42,021 பேருக்கு தடுப்பூசி

ஈரோடு மாவட்ட 7வது கட்ட தடுப்பூசி முகாம்:  42,021 பேருக்கு தடுப்பூசி
X
ஈரோடு மாவட்டத்தில் 7வது கட்டமாக நடைபெற்ற தடுப்பூசி முகாமில் 42,021 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் 3-வது அலையை கட்டுப்படுத்திட 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் வகையில் கடந்த மாதம் 12-ம் தேதி முதல் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், வாரத்தின் அனைத்து நாட்களிலும் நகர்ப்புற மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் முதல் கட்ட தடுப்பூசி முகாமில், 97 ஆயிரத்து 198 பேருக்கும், 2-வது கட்ட தடுப்பூசி முகாமில் 48 ஆயிரம் பேருக்கும், 3-வது கட்ட தடுப்பூசி முகாமில் 84 ஆயிரத்து 400 பேருக்கும், 4-ம் கட்ட தடுப்பூசி முகாமில் 56 ஆயிரத்து 924 பேருக்கும், 5-வது கட்ட தடுப்பூசி முகாமில் 71 ஆயிரத்து 960 பேருக்கும் , 6-வது கட்ட தடுப்பூசி முகாமில் 78 ஆயிரம் பேருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இந்நிலையில் 7- வது கட்ட தடுப்பூசி முகாம் மாவட்டத்தில் 1,089 மையங்களில் வெள்ளி (29ம்தேதி) மற்றும் சனி (30ம் தேதி) என இரு நாட்களாக காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 7 மணி வரை நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 42,021 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதில், ஈரோடு மாநகராட்சி பகுதியில் 60 வார்டுகளில் தலா ஒரு மையம் மூலமும், 40 நடமாடும் வாகனங்கள் மூலமும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. பொதுமக்கள் தங்கள் பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த முகாம்களுக்கு காலை முதல் ஆர்வமுடன் சென்று முதல் தவணை மற்றும் 2-ம் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!