/* */

ஈரோடு மாவட்டத்தில் இன்று 405 பேர் கொரோனாவால் பாதிப்பு

ஈரோடு மாவட்டத்தில் இன்று புதிதாக 405 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. முதியவர் ஒருவர் பலி.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் இன்று 405 பேர் கொரோனாவால் பாதிப்பு
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று மாவட்டம் முழுவதும் 4 ஆயிரத்து 249 பேருக்கு பரிசோதனை செய்ததில் 576 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது. இந்நிலையில் இன்று சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட பட்டியலின்படி புதிதாக 405 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 30 ஆயிரத்து 254 ஆக உயர்ந்தது. மேலும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 883 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 22 ஆயிரத்து 371 பேர் தொற்றில் இருந்து மீண்டு உள்ளனர். மாவட்டத்தில் கடந்த 3ஆம் தேதி 65 வயது முதியவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 727 பேர் பலியாகியுள்ள நிலையில், தற்போது தொற்று உள்ள 7 ஆயிரத்து 156 பேர் பல்வேறு மருத்துவமனை மற்றும் வீட்டுத் தனிமையிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Updated On: 5 Feb 2022 4:45 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...
  2. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!
  3. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  5. வீடியோ
    மிஷ்கின் படத்தில எல்லாமே violenceஅது societyக்கு...
  6. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  7. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    ஆணவம்: வாழ்வை சிதைக்கும் நஞ்சு
  9. லைஃப்ஸ்டைல்
    பன்முகத்திறனில் தனித்த அடையாளம், சட்டமேதை அம்பேத்கர்..!
  10. வீடியோ
    🔴LIVE: கர்நாடகாவில் அண்ணாமலை அனல் பறக்கும் பேச்சு! | தொண்டர்கள்...