ஈரோடு மாவட்டத்தில் 4 இளம்பெண்கள் மாயம்

ஈரோடு மாவட்டத்தில் 4 இளம்பெண்கள் மாயம்
X
ஈரோடு மாவட்டத்தில் பள்ளி மாணவி உட்பட 4 இளம்பெண்கள் மாயனது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்

கோபிச்செட்டிப்பாளையம், நம்பியூர் அருகே உள்ள கெட்டி செவியூர் அடுத்த சொக்குமாரிபாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகன் இவரது மகள் ரம்யா (வயது23). ரம்யாவுக்கு கட ந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அருண்குமார் என்பவருடன் திருமணம் நடந்தது. அவர் உடல் நிலை குறைவால் இறந்து விட்டார்.இதையடுத்து கடந்த 5 மாதத்துக்கு முன்பு ரம்யாவுக்கு செந்தில் என்பவருடன் 2-வது திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து தனது தந்தை வீட்டில் தங்கி கொளப்பலூரில் உள்ள ஒரு மில்லுக்கு வேலைக்கு சென்று வந்தார்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரம்யா வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வெளியில் சென்றார். இரவு நீண்ட நேரமாகியும் அவர் வீட்டுக்கு வரவில்லை. அக்கம் பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடி பார்த்து அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.இது குறித்து ரம்யாவின் தந்தை முருகன் சிறுவலூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பவானிசாகர், புஞ்சை புளியம்பட்டி ஜெ.ஜெ. நகரை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவரது மனைவி மீனா இவர்களது மகள் பிரியதர்ஷினி (வயது 17). இவர் 10-ம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். .இவர் கடைக்கு செல்வதாக கூறி விட்டு வீட்டில் இருந்து வெளியில் சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீட்டுக்கு வரவில்லை. அவரை அக்கம் பக்கம் தேடி பார்த்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இது குறித்து மீனா அதே பகுதியை சேர்ந்த மனோஜ்குமார் தனது மகளை அழைத்து சென்றிருக்கலாம் என புஞ்சை புளியம்பட்டி காவல் நிலையத்தில் புகாரளித்தார்.இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

சென்னிமலை அருகே உள்ள பசுவபட்டி அடுத்த கணபதிபாளையம் ளயம் பகுதியை சேர்ந்தவர் கருப்புசாமி. இவரது மகள் கீதா (வயது 21). இவர் சென்னிமலையில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலை பார்த்து வந்தார்.இந்த நிலையில் கருப்புசாமி மற்றும் அவரது மனைவி அன்னக்கொடி இருவரும் விஷேசத்துக்கு சென்று விட்டனர். கீதா வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.வெளியில் சென்றிருந்த கருப்புசாமி, அன்னக்கொடி அவரது மகளுக்கு போன் செய்தனர். ஆனால் அவர் போன் எடுக்கவில்லை. இதனால் வீட்டுக்கு வந்து பார்த்த போது கீதா வீட்டில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.இது குறித்து சென்னிமலை காவல்நிலையத்தில் கருப்புசாமி புகார் செய்தார். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஈரோடு பெரியசேமூர் தண்ணீர் பந்தல்பாளையம் பீச்சாங்காடு பகுதியை சேர்ந்தவர் அய்யாவு. இவரது மகள் ஜானகி (வயது 15).ஜானகி பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரமாகி அவர் வீட்டுக்கு வரவில்லை. நண்பர்கள் வீடுகள் மற்றும் உறவினர்களிடம் விசாரித்தும் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.இது குறித்து அய்யாவு கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். காவல் ஆய்வாளர் கோபிநாத் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!