ஈரோடு: யானை தந்தம் வைத்திருந்த 4 பேர் கைது; ஒருவர் தலைமறைவு

ஈரோடு: யானை தந்தம் வைத்திருந்த 4 பேர் கைது; ஒருவர் தலைமறைவு
X

அந்தியூர் அருகே, யானை தந்தங்களுடன், 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Elephant Tusk -ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே யானை தந்தங்களை வைத்திருந்த 4 பேர் கொண்ட கும்பலை தனிப்பிரிவு போலீசார் பிடித்து, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Elephant Tusk -ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி அருகேயுள்ள குண்டுசெட்டிபாளையம் பகுதியில், ஒரு வீட்டில் யானை தந்தம் வைத்திருப்பதாக மாவட்ட தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தனிப்பிரிவு போலீசார் சந்திரசேகர் (45) என்பவரது வீட்டில், சோதனை செய்தபோது, யானை தந்தம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து, சந்திரசேகரிடம் விசாரணை நடத்தியதில், பர்கூர் கல்வாரையை சேர்ந்த பழனிச்சாமி (எ) ராசா (50) , செல்லப்பன் (35) , எண்ணமங்கலத்தை சேர்ந்த மகேந்திரன் என மொத்தம் 4 பேரை பிடித்த போலீசார், அவர்களிடம் இருந்த 4 தந்தங்களை கைப்பற்றிய தனிப்பிரிவு போலீசார், அந்தியூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

மேலும், யானை தந்தங்களை கடத்திய விவகாரத்தில், மற்றொரு முக்கிய நபரான பர்கூர் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியம் என்பவரை அந்தியூர் வனத்துறையினர் மற்றும் போலீசார் தேடி வருகின்றனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!