பவானியில் வக்கீலை தாக்கிய பேக்கரி உரிமையாளர் உள்பட 4 பேர் கைது

பவானியில் வக்கீலை தாக்கிய பேக்கரி உரிமையாளர் உள்பட 4 பேர் கைது
X

வக்கீலை 4 பேர் சேர்ந்து தாக்கிய போது பதிவான சிசிடிவி காட்சியின் படம்.

ஈரோடு மாவட்டம் பவானியில் வக்கீலை தாக்கிய பேக்கரி உரிமையாளர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

பவானியில் வக்கீலை தாக்கிய பேக்கரி உரிமையாளர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பரத் (வயது 28). மூத்த வக்கீல் ப.பா மோகனிடம் ஜூனியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் வக்கீல் பரத் நேற்று மாலை பவானி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு பேக்கரிக்கு சென்றுள்ளார்.

அப்போது மழை பெய்ததால் தனது இருசக்கர வாகனத்தை பேக்கரி முன்பு நிறுத்தியுள்ளார். இதை பார்த்த பேக்கரியில் வேலை செய்து வரும் குருப்பநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த அசோக்குமார் (வயது 34) என்பவருக்கும், வக்கீலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த அசோக்குமார், பேக்கரி உரிமையாளர் பிரகாஷ் (வயது 34), பேக்கரியில் வேலை செய்யும் பவானி பெருமாள்புரத்தை சேர்ந்த ஈஸ்வரன் (வயது 35), அந்தியூர் தாமரைகரை பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 29) ஆகியோருடன் சேர்ந்து வக்கீலை தாக்கியுள்ளனர்.

இதுகுறித்து பவானி பார் அசோசியேஷன் சார்பில் பவானி போலீஸ் நிலையத்தில் பரத் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி காட்சியை வைத்து விசாரணை நடத்தி, 4 பேரையும் கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
latest agriculture research using ai