கோபிசெட்டிபாளையம் அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது

கோபிசெட்டிபாளையம் அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது
X

பைல் படம்

கோபிசெட்டிபாளையம் அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.400-யை பறிமுதல் செய்தனர்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நாய்க்கன்காடு ஜோதிநகரில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக கோபி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து போலீசார் அங்கு சென்று பார்த்த போது மறைவான இடத்தில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவது தெரியவந்தது. சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடு பட்ட நாய்க்கன்காட்டை சேர்ந்த கணேசன் (57), வண்டிபேட்டையை சேர்ந்த ராதாகிருஷ்ணன்(51),கடை வீதியை சேர்ந்த முகமது ஜாபர்(35),நாய்க்கன்காடு மாரப்பன் வீதியை சேர்ந்த மணி கண்டன்(32) ஆகியோரை கைது செய்த, போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.400-யை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!