பவானி அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது

பவானி அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது
X

பைல் படம்

பவானி அருகே உள்ள பெருமாள்மலை பகுதியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள பெருமாள்மலை பகுதியில் சித்தோடு போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பெருமாள்மலை பேருந்து நிறுத்தம் அருகே உள்ள பொது கழிப்பறை பின்புறம் சிலர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, சூதாட்டத்தில் ஈடுபட்ட பெருமாள் மலைப் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி (29), கிருஷ்ணமூர்த்தி (40), சுதாகர் (28), விக்னேஸ்வரன் (29) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர், அவர்களிடம் இருந்து ரூ.1,050-ஐ போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!