ஈரோட்டில் பெண் குழந்தை விற்பனை புகாரில் மேலும் 4 பேர் கைது

ஈரோட்டில் பெண் குழந்தை விற்பனை புகாரில் மேலும் 4 பேர் கைது
X

கைது செய்யப்பட்ட 4 பேரையும் படத்தில் காணலாம்.

ஈரோட்டில் பெண் குழந்தை விற்பனை புகாரில் மேலும் 2 பெண்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஈரோட்டில் பெண் குழந்தை விற்பனை புகாரில் மேலும் 2 பெண்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஈரோடு கனிராவுத்தர் குளம் மசூதி அருகே வசிப்பவர் நித்யா (வயது 28). இவரது சொந்த ஊர் தஞ்சாவூர் திருவையாறு திருப்பள்ளனம் மேல தெரு. இவருக்கு எடிசன் என்பவருடன் திருமணமாகி அம்முராணி என்ற பெண் குழந்தை உள்ளது.

எடிசனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து தற்போது ஈரோடு மாணிக்கம்பாளையம் முனியப்பன் கோவில் வீதி கிழக்குகாடு சந்திர மோகன் மகன் சந்தோஷ்குமாருடன் (வயது 28) இரண்டு ஆண்டாக வசித்து வருகிறார்.

சந்தோஷ்குமார் தற்போது நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மாம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே வசிக்கிறார். இவர்களுக்கு 40 நாட்களுக்கு முன் ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது.

அந்த குழந்தையை நான்கரை லட்சம் ரூபாய்க்கு விற்றனர். பின்னர் நித்யா மனம் மாறினார். குழந்தை விற்றது குறித்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் மூலம் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவ்விவகாரத்தில் சந்தோஷ் குமார், செல்வி, ரேவதி, பானு, ராதாவை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், குழந்தையை விலைக்கு வாங்கிய தம்பதியான கன்னியாகுமரி தக்கலை கல்லுவிலை மேங்கா மண்டபம் பாலபள்ளியைச் சேர்ந்த ஜெயசந்திரன் (வயது 46), அவரது மனைவி அகிலா ராணி (வயது 38), தென்காசி சங்கரன்கோவில் பெரம்பத்துார் மேற்கு தெருவை சேர்ந்த புரோக்கர் ஜெயபாலன் (வயது 40) மற்றும் குழந்தையின் தாய் நித்யா ஆகிய நால்வரை ஈரோடு வீரப்பன்சத்திரம் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா