சலங்கபாளையத்தில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 4 பேர் கைது

சலங்கபாளையத்தில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 4 பேர் கைது
X

பைல் படம்

கவுந்தப்பாடி அடுத்த சலங்கபாளையத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனையில், ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த கவுந்தப்பாடி அருகே உள்ள சலங்கபாளையத்தில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக, கவுந்தப்பாடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் வெள்ளிங்கிரி மற்றும் போலீசார் அப்பகுதிக்கு சென்று விசாரித்தனர்.

அப்போது, அங்குள்ள மறைவான இடத்தில் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த குப்புசாமி, நாவலர்நகரை சேர்ந்த பாசீர் , நெசவாளர் காலனியை சேர்ந்த சுப்பிரமணி மற்றும் கருங்கல்பாளையத்தை சேர்ந்த வெங்கடேஷ் ஆகிய 4 பேர் மீதும், போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவர்களின் இருந்து 20 லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!