ஈரோடு மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 3-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 3-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
X

பைல் படம்

ஈரோடு மாவட்டத்திற்கு தீரன்‌ சின்னமலை நினைவு தினத்தையொட்டி வரும் ஆகஸ்ட் 3-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்ட கலெக்டர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சுதந்திர போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலை நினைவு நாள் மற்றும் ஆடிப்பெருக்கு தினத்தை முன்னிட்டு அடுத்த மாதம் (ஆகஸ்டு) 3-ம் தேதி ஈரோடு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அதன்படி அன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் செயல்படாது. இந்த உள்ளூர் விடுமுறை செலாவணி முறிச்சட்டத்தின் கீழ் வராது என்பதால் அரசுப் பாதுகாப்புக்கான அவசர அலுவல்கள் கவனிக்கும் பொருட்டு அன்றைய தினம் மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும்.இந்த உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வருகிற ஆகஸ்ட் 27-ம் தேதி (சனிக்கிழமை) பணி நாளாக செயல்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags

Next Story
ai future project