ஈரோடு மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையின் மூலம் ரூ.3559.60 கோடி பயிர் கடன் வழங்கல்

ஈரோடு மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையின் மூலம் ரூ.3559.60 கோடி பயிர் கடன் வழங்கல்
X

கூட்டுறவுத் துறையின் மூலம் வட்டியில்லா பயிர் கடன் பெற்று பயனடைந்து வரும் ஈரோடு மாவட்டம் நசியனூர், சாமிகவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம்

ஈரோடு மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையின் மூலம் 2021-2024 வரை 2.92 லட்சம் நபர்களுக்கு ரூ.3559.60 கோடி மதிப்பீட்டிலான பயிர் கடன் வழங்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையின் மூலம் 2021-2024 வரை 2.92 லட்சம் நபர்களுக்கு ரூ.3559.60 கோடி மதிப்பீட்டிலான பயிர் கடன் வழங்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத் துறையின் மூலம் மத்திய வங்கி மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அளவில் பயிர்க்கடன்கள், நகையீட்டு பயிர்க்கடன், மத்திய காலக் கடன், நகைக் கடன், பண்ணைசாராக் கடன். வீட்டு வசதிக் கடன், வீட்டு அடமானக் கடன், தானிய ஈட்டுக்கடன், சுய உதவிக் குழுக் கடன், மகளிர் தொழில் முனைவோர் கடன், மாத வருமானம் பெறும் மகளிர் கடன், டாப்செட்கோ, டாம்கோ, மாற்று திறனாளிகள் கடன், சிறு வணிக் கடன், கூட்டுபொறுப்புக் குழுக்களுக்கு கடன், மேலும், நகர கூட்டுறவு வங்கிகள் மூலம் வைப்புகள், நகைக்கடன், சுய உதவிக் குழுக் கடன், சிறுவியாபாரிகளுக்கான் கடன் மற்றும் கூட்டுப் பொறுப்புக் குழு கடன் மற்றும் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் மூலம் வேளாண் விளைபொருள் விற்பனை தானிய ஈட்டுக் கடன் உள்ளிட்ட பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், ஈரோடு மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையின் மூலம் கடந்த மூன்று ஆண்டுகளில் (2021-2022 முதல் 2023-2024 வரை) பயிர்க்கடனாக 2 லட்சத்து 92 ஆயிரத்து 724 நபர்களுக்கு ரூ.3559.60 கோடியும், கால்நடை பராமரிப்புக் கடனாக 51,649 நபர்களுக்கு ரூ.308.87 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் நடப்பு ஆண்டில் (ஏப்ரல் 2024 முதல் டிசம்பர் 2024) பயிர்க்கடனாக 58,019 நபரர்களுக்கு ரூ.789.89 கோடியும், கால்நடை பராமரிப்புக் கடனாக 14,593 நபர்களுக்கு ரூ.101.28 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் வட்டியில்லா பயிர்கடன் வழங்கும் திட்டத்தில் ஈரோடு மாவட்டம் முதன்மை மாவட்டமாக திகழ்ந்து வருகிறது.

இதுகுறித்து நசியனூர், சாமிகவுண்டன்பாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயி சுப்பிரமணியம் (வயது 61) என்பவர் தெரிவித்தாவது:-

நாங்கள் குடும்பத்துடன் தொன்று தொட்டு விவசாயம் செய்து வருகிறோம். எனக்கு ஒரு மனைவியும், 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் குழந்தை உள்ளனர். விவசாயத்தை நம்பி தான் எங்களது வாழ்வாதாரம் உள்ளது. தமிழ்நாடு அரசின் மூலம் வழங்கப்படும் வட்டியில்லா பயிர் கடன் மூலம் எங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகிறோம்.

தற்பொழுது நசியனூர் நகர கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் கரும்பு பயிரிடுவதற்கு ரூ.1.50 லட்சம் பயிர் கடன் பெற்று, கரும்பு பயிரிட்டுள்ளேன். எங்களை போன்ற விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர் கடன் வழங்கும் திட்டத்தினை செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு அனைத்து விவசாயிகள் சார்பாக நிறைந்த மனதுடன் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!