ஈரோடு மாவட்டத்தில் 34 மது பார்கள் இன்று திறப்பு

ஈரோடு மாவட்டத்தில் 34 மது பார்கள் இன்று திறப்பு
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை, அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவை மற்றும் டெபாசிட் தொகையை 34 பார் உரிமையாளர்கள் மட்டுமே செலுத்தியுள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் 213 டாஸ்மாக் கடைகளில், 118 கடைகளில் பார்கள் இயங்குகின்றன. கடந்த செப்.30ம் தேதியுடன் பார்களுக்கான ஒப்பந்தம் முடிந்தது. அதேசமயம் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மூடப்பட்ட மது பார்கள் நவம்பர் 1ம் தேதி திறக்கப்படும் என அரசு அறிவித்தது. ஆனால் ஒப்பந்தகாலம் முடிந்ததால், பார்களை திறப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதற்கிடையில் ஆண்டு இறுதி வரை ஏல ஒப்பந்தத்தை நீட்டித்து, அரசு அறிவிப்பை வெளியிட்டது. ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை, அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவை மற்றும் டெபாசிட் தொகையை 34 பார் உரிமையாளர்கள் மட்டுமே செலுத்தியுள்ளனர். இதனால் 34 பார்கள் இன்று திறக்கப்படுவது உறுதியாகிறது. ஏனைய பார் உரிமையாளர்கள் நிலுவை மற்றும் டெபாசிட் தொகையை இன்று செலுத்தும் பட்சத்தில் அவர்களுக்கு கால நீட்டிப்பு சலுகை வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!