ஈரோடு நகர்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி, 3,301 பேர் வேட்புமனு தாக்கல்

ஈரோடு நகர்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி, 3,301 பேர் வேட்புமனு தாக்கல்
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் இன்று மட்டும் 1,768 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

தமிழகத்தின் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக வரும் 19-ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் நடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து கடந்த 28ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இறுதி நாளான இன்று பல்வேறு கட்சியினை சேர்ந்த பலர் போட்டி போட்டு வேட்புமனு தாக்கல் செய்தனர். தமிழகம் முழுவதும் உள்ள 21 மாநகராட்சிகள் உட்பட அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கு வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து ஈரோடு மாநகராட்சியில் நேற்று 3-2-2022 வரை 126 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இன்று 4-2-2022-ம் தேதி 364 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் ஈரோடு மாநகராட்சியில் இதுவரை மொத்தம் 490 பேர் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

மேலும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகளில் போட்டியிட நேற்று வரை 246 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இதில் இன்று மட்டும் 271 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதனால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகளில் இதுவரை மொத்தம் 517 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். மேலும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 42 பேரூராட்சிகளில் போட்டியிட நேற்று வரை 1,161 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இன்று மட்டும் 1,133 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதையடுத்து ஈரோடு மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில் போட்டியிட இதுவரை 2,294 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இதுவரை ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 3,301 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

Tags

Next Story
future of ai in retail