ஈரோடு: நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் 31.62% பேர் தேர்ச்சி

ஈரோடு: நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் 31.62% பேர் தேர்ச்சி
X

பைல் படம்

ஈரோடு மாவட்டத்தில் நீட் தேர்வில் 623 அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு எழுதியதில், 197 பேர் வெற்றி பெற்று இருக்கின்றனர்.

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, கோபி, சத்தி, பவானி, பெருந்துறை என 5 கல்வி மாவட்டங்களில் 623 அரசுப்பள்ளி மாணவ, மாணவியர் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் நீட் தேர்வு எழுதினர். இதில் 197 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் 31.62 சதவீதம் ஆகும். இதில் 149 பேர் முதல் முறையாகவும், 48 பேர் 2-வது முறையாகவும் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 500 மதிப்பெண்ணுக்கு மேல் ஒருவரும், 400-க்கு மேல் இருவர், 300-க்கும் மேல் 5 பேர், 200-க்கும் மேல் 26 பேர், 100-க்கு மேல் 138 பேர், 93-க்கும் மேல் 25 பேர் மதிப்பெண் பெற்றுள்ளனர்.

Tags

Next Story
எப்டியெல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க!..டிங்கா டிங்கானு ஒரு நோயாமா..பேரு தாங்க அப்டி,ஆனா பயங்கரமான நோய்!..