ஈரோடு மாவட்டத்தில் 12-ம் தேதி 30-வது கட்ட மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்

ஈரோடு மாவட்டத்தில் 12-ம் தேதி 30-வது கட்ட மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில் வரும் 12-ம் தேதி 3,194 மையங்களில் 30-வது கட்டமாக மாபெரும் மெகா சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

கொரோனா பரவலை தடுப்பதற்காக தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் அதிக அளவில் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் வருகிற 12-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் முழுவதும் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்த முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, ஈரோடு மாவட்டத்தில் இந்த மாபெரும் தடுப்பூசி முகாமையொட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிக்கூடங்கள் உள்பட 3,194 மையங்களில் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை கொரோனா தடுப்பூசி இலவசமாக செலுத்தப்பட உள்ளது. மேலும், இந்த மாபெரும் தடுப்பூசி முகாமில் மாவட்டம் முழுவதும் 4,260 பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தும் பணி செய்திடவும், 67 வாகனங்கள் முகாமிற்காக பயன்படுத்தப்பட உள்ளது.

மாவட்டத்தில் 15 முதல் 18 வயதுடைய சிறுவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசிகள் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்களில் செலுத்தப்பட உள்ளது. 12 முதல் 14 வயதுடைய மாணவ-மாணவிகளுக்கு அவர்கள் படிக்கும் பள்ளிக்கூடத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. எனவே அனைவரும் அச்சமின்றி, தயக்கமின்றி கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ai healthcare technology