கோபி அருகே 30 கிலோ புகையிலை, பான்மசாலா பொருட்கள் பறிமுதல்

Tobacco News | Erode News Tamil
X

கைது செய்யப்பட்ட வேணு.

Tobacco News - கோபி அடுத்த நம்பியூர் அருகே உள்ள ஒட்டர்கரட்டுபாளையத்தில் ஆம்னிவேனில் 30 கிலோ புகையிலை மற்றும் பான்மசாலா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tobacco News -ஈரோடு மாவட்டம் கோபி அருகே கடத்தூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட நம்பியூர் ஒட்டர்கரட்டுபாளையத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை ஆம்னிவேனில் கடத்தி செல்லப்படுவதாக கடத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் போலீசார் கடத்தூர் இன்ஸ்பெக்டர் துரைபாண்டி மற்றும் போலீசார் ஒட்டர்கரட்டுபாளையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்குள்ள சிவசக்தி மாளிகை கடையின் முன்பு நிறுத்தி இருந்த ஆம்னிவேனில் 30 கிலோ புகையிலை பொருட்களை கடையின் உரிமையாளர் வேணு என்பவர் கடைக்குள் எடுத்துக் கொண்டு செல்வது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் வேணுவை கைது செய்து, அவரிடம் இருந்து புகையிலை பொருட்கள் மற்றும் ஆம்னிவேனை பறிமுதல் செய்தனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் இளைஞரணி துணைச் செயலாளர்  செந்தில் முருகன்!