வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு : மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உண்ணி

வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு : மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உண்ணி
X

பைல் படம்.

ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உண்ணி தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் நேற்று 238 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் ஈரோடு சித்தோடு பொறியியல் கல்லூரியில் அமைந்துள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உண்ணி இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் இருக்கின்றது. பாதுகாப்பு நடைமுறைகள் படி வாக்குப்பதிவு இயந்திரம் இருக்கும் 2 இடங்களிலும், சி.ஆர்.பி.எப் மற்றும் ஆயுதப்படை காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் போலீசார் 450 பேர் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் ஸ்டிராங் ரூம் உள்ள பகுதியில் 48 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுவதாகவும் கூறினார்.

மேலும் இரு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதடைந்துள்ளது. எந்ததெந்த மிஷன் பழுதாகி இருக்கின்றதோ அதுவும், அதற்கு மாற்றாக பயன்படுத்தபட்டதும் கணக்கில் எடுத்து கொள்ளப்படும் வாக்குபதிவு குறித்து விழிப்புணர்வு எற்படுத்தபட்டது. கொடி அணவகுப்பு நடத்தப்பட்டது. நம்பிக்கை கொடுத்தன் அடிப்படையில் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. வாக்கு எண்ணிக்கைக்காக 16 டேபிள் போடப்பட்டுள்ளது.15 சுற்று வாக்கு எண்ணிக்கை இருக்கும்.

விவிபேட் ரேண்டம் முறையில் எண்ணப்படும். சராசரியை விட அதிகமான வாக்குபதிவாகியுள்ள வாக்குசாவடிகள் குறித்து தணிக்கைக்கு எடுத்து கொள்ளபடும் என்று தெரிவித்த அவர் 8 மணிக்கு தபால் வாக்குகளும், அதை தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்களில் எண்ணிக்கை தொடங்கும் என்றும் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உண்ணி கூறியுள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!