கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் இதுவரை 6 பேர் வேட்புமனு தாக்கல்

கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் இதுவரை 6 பேர் வேட்புமனு தாக்கல்
X

கோபிசெட்டிபாளையம் நகராட்சி அலுவலகம் (பைல் படம்)

கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் நேற்று 3 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

நகராட்சிகளில் உள்ளாட்சி தேர்தல் வருகிற, 19ம் தேதி நடைபெற உள்ளது. கடந்த மாதம், 28ம் தேதி வேட்புமனுத் தாக்கல் துவங்கியது. ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சியில், உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. நகராட்சியில் நேற்று 19,30 ஆகிய வார்டுகளில் நாம் தமிழர் கட்சியினர் இருவரும் மற்றும் 30வது வார்டில் சுயேச்சையாக ஒருவரும் என, 3 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். கோபி நகராட்சியில் கடந்த 2 நாட்களில் 6 பேர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!