நம்பியூர்: நகை திருடிய வழக்கில் 3 பேர் கைது.

நம்பியூர்: நகை திருடிய வழக்கில் 3 பேர் கைது.
X

பைல் படம்.

நம்பியூர் அருகே நகை திருட்டு வழக்கில் தேடப்பட்டு வந்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நம்பியூர் அருகே கீழ்காந்திபுரத்தை சேர்ந்தவர் கருப்புச்சாமி. கடந்த 5-ம் தேதி, இவரின் வீட்டில் இரண்டு பவுன் நகை திருட்டு போனது. அதேபோல், கடந்த 9-ம் தேதி நம்பியூரை சேர்ந்த சேந்தன் என்பவரது வீட்டிலும் மூன்று பவுன் நகை திருட்டு போனது. நம்பியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் நம்பியூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, பைக்கில் வந்த நம்பியூரை சேர்ந்த ரவி, சக்திவேல், 17வயது சிறுவன் ஆகியோரிடம், சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் என தெரிந்தது. ரவி மற்றும் சக்திவேலை மாவட்ட சிறையில் அடைத்தனர். 17 வயது சிறுவன் சீர்திருத்தப்பள்ளியில் ஒப்படைத்தனர். அவர்களிடமிருந்து, ஐந்து பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
நாமக்கல் ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் - மூத்த பணியாளர்களின் நலனுக்கான அரசின் முயற்சி