கோபி அருகே நடைபாதை தகராறில் ஒருவருக்கு கத்தி‌குத்து: 3 பேர் கைது

கோபி அருகே நடைபாதை தகராறில் ஒருவருக்கு கத்தி‌குத்து: 3 பேர் கைது
X

பைல் படம்.

கோபிசெட்டிபாளையம் அருகே நடைபாதை தொடர்பான தகராறில் தாய், மகனை தாக்கி கத்தியால் குத்திய 3 பேர் போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஆயிபாளையத்தை சேர்ந்தவர் லிங்கேஸ்வரன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஆனந்தன் என்பவருக்கும் நடைபாதை தொடர்பாக தகராறு இருந்து வந்தது. இதனையடுத்து, நேற்று மீண்டும் தகராறு ஏற்படவே, ஆனந்தன், அவரது தந்தை தங்கமணி மற்றும் தாயார் ருக்குமணி ஆகியோர் லிங்கேஸ்வரனை தாக்கி கத்தியால் குத்தியுள்ளனர்.

இதனை தடுக்க வந்த லிங்கேஸ்வரனின் தாயார் கண்ணம்மாள் என்பவரையும் அடித்துள்ளனர். பின்னர், படுகாயமடைந்த லிங்கேஸ்வரன் மற்றும் அவரது தாயார் கண்ணம்மாள் கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து, கடத்தூர் போலீசார் 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story