அந்தியூரில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் கைது

அந்தியூரில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் கைது
X

பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள்.

அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் சட்டவிரோதமாக அரசு மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக 3 பேர் கைது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாக எழுந்த புகாரின் அடிப்படையில், அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது வெள்ளைப்பிள்ளையார் கோவில் அருகில் மது விற்பனை செய்து கொண்டிருந்த, புதுப்பாளையம் வஉசி நகரைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார்.இவரிடமிருந்து 16 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல், அந்தியூரில் இருந்து அத்தாணி செல்லும் வழியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டிருந்த தவிட்டுப்பாளையத்தை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் கைது செய்யப்பட்டார். இவரிடமிருந்து 12 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், அந்தியூர் அடுத்த பிரம்மதேசம் பகுதியில் மது விற்பனையில் ஈடுபட்ட பெரியசாமி என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 12 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!