இன்று ஈரோடு செய்தியாளர்கள்,ஔிப்பதிவாளர்களுக்கான 2ம் தவணை தடுப்பூசி முகாம்

இன்று  ஈரோடு செய்தியாளர்கள்,ஔிப்பதிவாளர்களுக்கான 2ம் தவணை தடுப்பூசி முகாம்
X

செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்களுக்கு நடந்த 2ம் தவணை தடுப்பூசி முகாம்.

ஈரோடு மாவட்ட செய்தியாளர்கள் மற்றும் ஔிப்பதிவாளர்களுக்கான இரண்டாம் தவணை தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் வார்டு வாரியாக தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் முன்களப்பணியாளர்களான செய்தியாளர்கள் மற்றும் ஔிப்பதிவாளர்களுக்கான இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசி முகாம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று நடைபெற்றது. இந்த முகாமி் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து செய்தியாளர்கள் மற்றும் ஔிப்பதிவாளர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்