ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 29,046 பேருக்கு கொரோனா தடுப்பூசி

ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 29,046 பேருக்கு கொரோனா தடுப்பூசி
X

கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் பகுதியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமினை நகராட்சி தலைவர் நாகராஜ் பார்வையிட்டார்.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று நடந்த 34-வது கட்ட மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமில் 29,046 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

ஈரோடு மாவட்டம், முழுவதும் நேற்று மொத்தம் 1,597 மையங்களில் 34-வது கட்ட மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

இந்த முகாம் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை இடைவிடாமல் நடந்தது. முகாமில் முதல் தவணை தடுப்பூசியை 1,041 பேரும், 2வது தவணை தடுப்பூசியை 16,361 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 11,644 பேரும் என மொத்தம் 29,046 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!