கொடுமுடியில் 26ம் தேதி உண்ணாவிரத போராட்டம்: பாஜக விவசாய அணித்தலைவர்

கொடுமுடியில்  26ம் தேதி உண்ணாவிரத போராட்டம்:  பாஜக விவசாய அணித்தலைவர்
X

ஈரோடு தெற்கு மாவட்டம் சார்பில் நடைபெற்ற செயற்குழு கூட்டம்.

கொடுமுடி மகுடேஸ்வரர் கோயில் செயல்அலுவலர் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து 26ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெறும்.

ஈரோடு மாவட்டம் கொடுமுடி மகுடேஸ்வரர் கோயிலில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடியதாக செயல் அலுவலர் உள்பட சிலர் மீது புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் செயல்அலுவலர் ரமேஷ், மொடக்குறிச்சி எம்எல்ஏ சரஸ்வதி உள்பட சிலர் மீது பொய் புகார் தெரிவித்து கொடுமுடி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த பாஜக மாநில விவசாய அணி தலைவர் நாகராஜ், ஆகம விதிகளுக்கு எதிராக செயல்பட்ட செயல்அலுவலர் ரமேஷ் மீது நடவடிக்கை எடுக்கவேண்டி வரும் 26ம்தேதி உண்ணாவிரதம் போராட்டம் நடைபெறும் எனவும், அதற்குபிறகும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெறும் என பாஜக மாநில விவசாய அணி தலைவர் நாகராஜ் தெரிவித்தார்.

Tags

Next Story
ai marketing future