வெள்ளோடு அருகே ரூ.2.67 லட்சம் நகைகள் கொள்ளை

வெள்ளோடு அருகே ரூ.2.67 லட்சம் நகைகள் கொள்ளை
X

பைல் படம்

வெள்ளோடு அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து பணம், நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

ஈரோடு மாவட்டம், வெள்ளோடு அடுத்த முகாசி அனுமன்பள்ளி, இந்திரா நகரை சேர்ந்தவர் பொன்னுசாமி. விவசாயியான இவருக்கு மனைவி சரோஜா, 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி ஈரோட்டில் வசித்து வருகின்றனர். பொன்னுசாமியும், சரோஜாவும் தனியாக வசித்து வந்தனர்.

பொன்னுசாமியும், அவரது மனைவி சரோஜாவும் தங்களது உறவினர் வீட்டுக்கு நேற்று முன்தினம் பகல் 2 மணி அளவில் காரில் சென்று விட்டு மாலை 4 மணியளவில் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் வெளிப்புற கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதனையடுத்து வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, படுக்கையறையில் இருந்த பீரோக்களை சாவி மூலம் திறந்து அதிலிருந்த ரூ. 1 லட்சத்து 45 ஆயிரம், ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான 4 ஜோடி தங்க கம்மல், ரூ. 22 ஆயிரம் மதிப்பிலான தங்க காசு மற்றும் ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான வெள்ளிப் பொருட்கள் ஆகியவை திருடிச் சென்றது தெரியவந்தது.

இந்த திருட்டில் பணம் மற்றும் நகைகளின் மொத்த மதிப்பு ரூ. 2 லட்சத்து 67 ஆயிரம் ஆகும். இது குறித்து பொன்னுசாமி வெள்ளோடு போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா