வெளிநாடுகளில் இருந்து ஈரோட்டிற்கு இதுவரை 259 பேர் வருகை

வெளிநாடுகளில் இருந்து ஈரோட்டிற்கு இதுவரை 259 பேர் வருகை
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டத்திற்கு இதுவரை வந்த 259 பேரில், 125 பேருக்கு 2-ம் கட்ட பரிசோதனையில் பாதிப்பு இல்லை என சுகாதாரத்துறை தகவல்.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உருமாற்றம் அடைந்த ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டது. இதன் தடுப்பு நடவடிக்கையாக, வெளிநாடுகளில் இருந்து இதுவரை ஈரோடு மாவட்டத்திற்கு 259 பேர் வந்துள்ளனர். இவர்கள் அனைவரும், கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


இதில், 125 பேருக்கு இரண்டாவது கட்டமாக சுகாதாரத் துறையினர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். இதில் அவர்கள் அனைவருக்கும் எந்த ஒரு பாதிப்பும் இல்லை என முடிவு வந்துள்ளது. மேலும் 134 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளனர் என சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்