ஈரோட்டில் 250 தனியார் மருத்துவமனைகள் இன்று வேலைநிறுத்தம்
ஈரோட்டில் தனியார் மருத்துவமனைகள் வேலை நிறுத்தம்.
Tamil Nadu Strike- ஈரோட்டில் சட்ட விரோதமாக கருமுட்டை பெறப்பட்ட விவகாரத்தில், ஈரோடு சுதா மருத்துவமனைக்கு, சுகாதாரத்துறை சீல் வைத்தது. இந்த உத்தரவுக்கு தடை ஆணை பெற்று, மீண்டும் செயல்பட துவங்கினர். பின்னர், சென்னை உயர்நீதிமன்றம், சீல் வைத்த அரசு உத்தரவுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியது. இந்நிலையில், சுதா மருத்துவமனைக்கு சீல் வைக்கும் முயற்சியை கைவிடக்கோரி, இன்று ஒரு நாள் ஈரோடு மாவட்டத்தில், 250 தனியார் மருத்துவமனைகள், 800 டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டோர், அவசர சிகிச்சைக்காக வருவோருக்கு மட்டும் சிகிச்சை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu