ஈரோடு மாவட்டத்தில் இன்று 246 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

ஈரோடு மாவட்டத்தில் இன்று 246 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
X

கோப்பு படம்

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 246 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் குறைந்து வருகிறது. ஈரோடு மாவட்டத்திலும் உச்சத்தை எட்டிய தொற்று பாதிப்பு பிறகு குறைய தொடங்கியது. நேற்று 3 ஆயிரத்து 956 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 288 பேருக்கு தொற்று உறுதியானது.

இந்த நிலையில் இன்று புதிதாக 246 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 31 ஆயிரத்து 166 ஆக உயர்ந்தது. இதில் 1 லட்சத்து 25 ஆயிரத்து 613 பேர் குணமடைந்தனர்.

கொரோனாவில் இருந்து மீண்டு வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. இன்று மட்டும் 1,087 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர். தற்போது 4 ஆயிரத்து 823 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பெரும்பாலானவர்கள் வீட்டு தனிமையில் உள்ளனர்.

இதற்கிடையே ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 63 வயது முதியவர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதனால் ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 730 ஆக உயர்ந்தது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்