ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 21,678 பேருக்கு கொரோனா தடுப்பூசி
X
பைல் படம்
By - S.Gokulkrishnan, Reporter |27 Sept 2022 9:00 AM
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற 38-வது கட்ட கொரோனா தடுப்பூசி முகாமில் மாவட்டம் முழுவதும் 21,678 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் 38-வது கட்ட மாபெரும் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் 1,597 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடந்தது.
இந்த முகாம்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை பொதுமக்கள் ஆர்வமாக வந்து கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இதில் 515 பேருக்கு முதல் தவணையும், 4,350 பேருக்கு 2-ம் தவணையும், 16 ஆயிரத்து 813 பேருக்கு 3-ம் தவணையும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதன் மூலம் நேற்று முன்தினம் ஒரேநாளில் 21ஆயிரத்து 678 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டது குறிப்பிடத்தக்கது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu