ஈரோடு மாவட்டத்தில் இன்று 203 பேருக்கு கொரோனா தாெற்று பாதிப்பு

ஈரோடு மாவட்டத்தில் இன்று 203 பேருக்கு கொரோனா தாெற்று பாதிப்பு
X

கோப்பு படம்

ஈரோடு மாவட்டத்தில் இன்று 946 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் குறைந்து வருகிறது. ஈரோடு மாவட்டத்திலும் உச்சத்தை எட்டிய தொற்று பாதிப்பு பிறகு குறைய தொடங்கியது. நேற்று 4ஆயிரத்து 102 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 246 பேருக்கு தொற்று உறுதியானது. இந்தநிலையில் இன்று புதிதாக 203 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 31 ஆயிரத்து 358 ஆக உயர்ந்தது. இதில் 1 லட்சத்து 26 ஆயிரத்து 559 பேர் குணமடைந்தனர்.

கொரோனாவில் இருந்து மீண்டு வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. இன்று மட்டும் 946 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர். தற்போது 4 ஆயிரத்து 69 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பெரும்பாலானவர்கள் வீட்டு தனிமையில் உள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 730 ஆக உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!