ஈரோடு: இரவு நேர ஊரடங்கை மீறியதாக 20 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

ஈரோடு: இரவு நேர ஊரடங்கை மீறியதாக 20 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
X
ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று இரவு நேர ஊரடங்கை மீறியதாக, 20 பேரின் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தமிழகத்தில் கொரோனா மீண்டும் தாக்கம் அதிகரிக்க தொடங்கி உள்ளதை அடுத்து பரவலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.அதன்படி கடந்த 6-ந் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில், இரவு நேர ஊரடங்கின் போது தேவையில்லாமல் சுற்றுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். நேற்று, மாவட்டம் முழுவதும் இரவு நேரத்தில் தேவையின்றி வெளியே சுற்றியதாக 20 பேரின் மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!