பெருந்துறை அருகே குப்பை கிடங்கில் 2 டன் குட்கா புகையிலை பொருட்கள் அழிப்பு

பெருந்துறை அருகே குப்பை கிடங்கில் 2 டன் குட்கா புகையிலை பொருட்கள் அழிப்பு
X

கருமாண்டிசெல்லிபாளையம் குப்பை கிடங்கில் தீ வைத்து அழிக்கப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள்.

பெருந்துறை அருகே குப்பை கிடங்கில் 2 டன் குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் அதிகாரிகள் முன்னிலையில் தீ வைத்து அழிக்கப்பட்டன.

பெருந்துறை பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட 2 டன் குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் அதிகாரிகள் முன்னிலையில் இன்று (சனிக்கிழமை) தீ வைத்து அழிக்கப்பட்டன.

தமிழகத்தில் குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனை செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தடையை மீறி வெளிமாநிலங்களில் இருந்து கடத்தி வரப்பட்ட மற்றும் கடைகளில் விற்கப்பட்ட குட்கா பொருட்களை உணவு பாதுகாப்பு அலுவலர்கள், காவல்துறையினர் ஆங்காங்கே சோதனை நடத்தி கிலோ மற்றும் டன் கணக்கில் பறிமுதல் செய்து வருகின்றனர்.

இவ்வாறாக, ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட 2 டன் எடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை பாதுகாப்பான முறையில் அழிப்பதற்காக உணவு பாதுகாப்புத் துறையினர் பெருந்துறை அருகே கருமாண்டிசெல்லிபாளையத்தில் உள்ள குப்பை கிடங்குக்கு கொண்டு சென்றனர்.

அங்கு காவல்துறை மற்றும் பெருந்துறை மற்றும் கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி அதிகாரிகள் முன்னிலையில், பறிமுதல் செய்யப்பட்ட 2 டன் புகையிலை பொருட்களை கொட்டி உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தீ வைத்து அழித்தனர்.

Tags

Next Story
டெல்லி டூ அமெரிக்கா அரை மணி நேரத்துலயா? என்னப்பா சொல்ற எலான் மஸ்க்..! | Delhi to America Flight Timings