அந்தியூர் அருகே காட்டு யானை தாக்கியதில் 2 வீடுகள் சேதம்

அந்தியூர் அருகே காட்டு யானை தாக்கியதில் 2 வீடுகள் சேதம்
X

யானை தாக்கியதில் சேதமடைந்த வீடுகள்.

Wild Elephant - அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் காட்டு யானை உணவு தேடி வந்தபோது தாக்கியதில் இரு வீடுகள் சேதமடைந்தன.

Wild Elephant - ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டம், பர்கூர் ஊராட்சி, மேல் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி மனைவி மாதம்மாள் (65). இவரது மகன் முனியப்பன், தனது மகளுடன் அருகாமையில் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று அதிகாலை இவர்களின் வசிப்பிடத்துக்கு காட்டுயானை உணவு தேடி வந்துள்ளது.


அப்போது, நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டு இவர்கள் வீட்டைவிட்டு வெளியே வந்து பார்த்தபோது யானை நின்றிருந்தது தெரியவந்தது.உணவு தேடி வந்த காட்டுயானை இவர்களின் வீட்டை சேதப்படுத்திவிட்டுச் சென்றது. இதுகுறித்த தகவலின்பேரில் பர்கூர் வனத்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். உணவு தேடி காட்டுயானை குடியிருப்புக்கு வந்து செல்வது அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!