பங்களாப்புதூர் , சித்தோடு பகுதிகளில் மளிகை கடையில் குட்கா விற்ற 2 பேர் கைது

Police Arrest | Gutka Ban
X

பைல் படம்.

Police Arrest- பங்களாப்புதூர், சித்தோடு பகுதிகளில் தடை செய்யப்பட்ட குட்காவை மளிகைக் கடையில் பதுக்கி வைத்து விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

Police Arrest- ஈரோடு மாவட்டம் பங்களாப்புதூர் அருகே உள்ள அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் நூர்முகம்மது (வயது 35). மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர் சட்டவிரோதமாக குட்கா பதுக்கி விற்பனை செய்வதாக பங்களாப்புதூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து அவரது கடையை சோதனை நடத்தினர். அப்போது கடையில் ரூ.70 ரூபாய் மதிப்புள்ள 10 குட்கா பாக்கெட்டுகள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து குட்காவை பறிமுதல் செய்து மளிகை கடைக்காரர் நூர்முகம்மதுவை பங்களாப்புதூர் போலீசார் கைது செய்தனர்.

இதேபோல், சித்தோடு அருகே உள்ள ஆர்.என்.புதூரில் முத்துராஜ் என்பவரின் மளிகை கடையில் சித்தோடு போலீசார் சோதனை நடத்தினர். சோதனையில், 15 குட்கா பாக்கெட்டுகள் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து, சித்தோடு போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்து குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது