கோபிசெட்டிபாளையம் அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது

கோபிசெட்டிபாளையம் அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது
X

கைது செய்யப்பட்ட இருவரையும் படத்தில் காணலாம்.

Ganja Seized- டி.என்.பாளையம் அருகே உள்ள கே.என்.பாளையம் பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Ganja Seized- ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த டி.என்.பாளையம் அருகே கே.என்.பாளையம் பகுதியில் பதுக்கி வைத்து கஞ்சா விற்பனை நடப்பதாக பங்களாப்புதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் கே.என். பாளையம் பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது,அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்ற வாலிபரை பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர் கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் கே.என்.பாளையம் பெரியசாமி கோவில் தெருவை சேர்ந்த கமலேஷ்வரன் என்கிற மாதவன் (வயது 21) என தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல், கே.என்.பாளையம் வன சோதனைச்சாவடியில், போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, கே.என்.பாளையம் காட்டிலாக்க தெருவை சேர்ந்த கருப்புசாமி (44) என்பவர் மோட்டாா் சைக்கிளில் வந்தார். அவரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தபோது கஞ்சா கடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து அவரை, போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து கஞ்சா, இருசக்கர வாகனம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.இன்று இருவேறு இடங்களில் பங்களாப்புதூர் போலீசார் மேற்கொண்ட சோதனையில், 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து தலா 200 கிராம் விதம் மொத்தம் 400 கிராம் அளவுள்ள கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!