சத்தியமங்கலம் காமதேனு கலை அறிவியல் கல்லூரியில் 19வது பட்டமளிப்பு விழா
காமதேனு கலை அறிவியல் கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் எடுத்தப் படம்.
சத்தியமங்கலம் அருகே உள்ள காமதேனு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 19வது பட்டமளிப்பு விழா இன்று (டிச.14) சனிக்கிழமை நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் - அத்தாணி சாலையில் டி.ஜி.புதூரர் அருகே காமதேனு நகரில் உள்ள காமதேனு கலை அறிவியல் கல்லூரியில் 19வது பட்டமளிப்பு விழா கல்லூரி கலையரங்கத்தில் கல்லூரி தலைவர் ஆர். பெருமாள்சாமி தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு, செயலாளர் அருந்ததி, இணை செயலாளர் மலர்செல்வி, முதன்மையர் நிர்மலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் குருமூர்த்தி வரவேற்று பேசினார். விழாவில் கோவை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர் கலைச்செல்வி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி பேசினார்.
அப்போது அவர் தாய் தந்தையரை கடவுளாக நினைத்து அவர்களுக்கு காணிக்கையாக உங்களுடைய நன்றி கடனை எதிர்காலத்தில் செலுத்த வேண்டும் என்றும் தமிழக அரசின் தமிழ் புதல்வன், நான் முதல்வன், புதுமைப் பெண் திட்டத்தை சரியாக பயன்படுத்தி வாழ்விலும் தேர்விலும் முன்னேற வேண்டும் என்று கூறினார் .
இந்த விழாவில், பல்கலைகழக தேர்வில் தங்கப்பதக்கம் வென்ற 3 பேருக்கும், ரேங்க் பட்டியலில் இடம் பெற்ற 10 பேருக்கும் என மொத்தம் 728 இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இதில் பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu